கலைஞர் மு.கருணாநிதி
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே !! இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அவரிடம் தாமதமாக வந்தடைந்த பல்லாயிர இளைஞர்களில் நானும் ஒருவன். ஒரு தலைவரைப் பெயர் கொண்டு குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால் கலைஞரை கருணாநிதி என்றும் செல்வி.ஜெயலலிதாவை அம்மா என்று சொல்வதில் உள்ளது ஒரு பார்ப்பனிய அரசியல். கலைஞர் என்ற சொல் சிலருக்கு அமுதம் சிலருக்கு விஷம். அவர் மீது தான் எத்தனை வன்மம் இச்சமூகத்துக்கு. நான் அறிந்தவரைத் தமிழகத்தில் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டவர் (அரசியல் தளத்தில்) கலைஞர். அதுவும் எச்சமூகத்தின் விடுதலை, முன்னேற்றத்துக்குத் திராவிட இயக்கம் பாடுபட்டதோ அவர்களிடம் இருந்து தான் மிகக் கடுமையான (அருவருப்பான) வன்சொற்களை எதிர் கொண்டார். அவர் இறந்த பின் இன்றும் அது தொடர்கின்றது. அவர் இறக்கும் சில மாதங்கள் முன்பு வரை அவரை எதிர்த்து/மிகக் கடுமையாக வசைச்சொற்களால் விமர்சிக்கும் இன்றைய நுனிப் புல் இளைஞர்களில் நானும் ஒருவன். நான் அவரைப் புரிந்து, வாசிப்பின் வாயிலாக நெருங்கத் தொடங்கிப் போது அவர் இறந்து விட்டார். இது எங்களைப் போன்றவர்களின் தனிப்பட்ட தோல்வ...