Posts

கலைஞர் மு.கருணாநிதி

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே !! இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அவரிடம் தாமதமாக வந்தடைந்த பல்லாயிர இளைஞர்களில் நானும் ஒருவன். ஒரு தலைவரைப் பெயர் கொண்டு குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால்  கலைஞரை  கருணாநிதி என்றும் செல்வி.ஜெயலலிதாவை அம்மா என்று சொல்வதில் உள்ளது ஒரு பார்ப்பனிய அரசியல். கலைஞர் என்ற சொல் சிலருக்கு அமுதம் சிலருக்கு விஷம். அவர் மீது தான் எத்தனை வன்மம் இச்சமூகத்துக்கு. நான் அறிந்தவரைத் தமிழகத்தில் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டவர் (அரசியல் தளத்தில்) கலைஞர். அதுவும் எச்சமூகத்தின் விடுதலை, முன்னேற்றத்துக்குத் திராவிட இயக்கம் பாடுபட்டதோ அவர்களிடம் இருந்து தான் மிகக் கடுமையான (அருவருப்பான) வன்சொற்களை எதிர் கொண்டார். அவர் இறந்த பின் இன்றும் அது தொடர்கின்றது. அவர் இறக்கும் சில மாதங்கள் முன்பு வரை அவரை எதிர்த்து/மிகக் கடுமையாக வசைச்சொற்களால் விமர்சிக்கும் இன்றைய நுனிப் புல் இளைஞர்களில் நானும் ஒருவன். நான் அவரைப் புரிந்து, வாசிப்பின் வாயிலாக நெருங்கத் தொடங்கிப் போது அவர் இறந்து விட்டார். இது எங்களைப் போன்றவர்களின் தனிப்பட்ட தோல்வ...

பார்ப்பனர்களுக்கான இந்தியா ?

இந்தியா பார்ப்பனர்களும் அவர்களின் அடிமைகளும் மட்டுமே வாழத் தகுதியுள்ள நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்   நமது வரலாற்றை , தனித்துவத்தை மாற்றி அமைக்கத் தொடங்கி விட்டனர். அசுரப் பலம் என்றுமே ஜனநாயகத்தில் ஆபத்தானது. இது தான் நான் முன்னரே பயந்தது தான். இது அவர்களின் 100 ஆண்டுக் கால தவம்.   ஒவ்வொரு காலகட்டத்திலும் எட்டப்பன் (துரோகி)  நமக்குள்  இருப்பார்கள் (இப்போது இருவர்). ஓர் இனத்தை அழிக்க இரண்டு கட்டமைப்பை உடைத்தால் போதும்‌ - கல்வி மற்றும் பொருளாதாரம்.   பா‌.ஜ.க தங்களின் முதல் ஐந்து வருட ஆட்சிக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த ஆட்களை இவை இரண்டிலும் அமர்த்தி விட்டனர். இப்போது அவர்கள் தங்களது வேலையைத் துவங்கி விட்டனர்.   பொருளாதாரத்தை இவர்கள் ஏற்கனவே உடைத்து விட்டனர். கு.மூர்த்தியும் , திரு.சக்தி காந்ததாஸ் அதற்குச் சான்று.   இப்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்பு. இங்குப் புதிய கல்விக் கொள்கை குறித்துப் பலரும் பகிரும் கருத்துக்கள் மிகவும் அச்சமூட்டுகிறது. இங்கு சில நண்பர்கள் அவர்களின் இளமைக் காலத்தில்   அடிப்படை கல்விக்...