பார்ப்பனர்களுக்கான இந்தியா ?
இந்தியா பார்ப்பனர்களும்
அவர்களின் அடிமைகளும் மட்டுமே வாழத் தகுதியுள்ள நாடாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் நமது வரலாற்றை, தனித்துவத்தை மாற்றி அமைக்கத் தொடங்கி விட்டனர். அசுரப் பலம்
என்றுமே ஜனநாயகத்தில் ஆபத்தானது. இது தான் நான் முன்னரே பயந்தது தான். இது அவர்களின் 100 ஆண்டுக் கால தவம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும்
எட்டப்பன் (துரோகி) நமக்குள் இருப்பார்கள் (இப்போது இருவர்).
ஓர் இனத்தை அழிக்க இரண்டு கட்டமைப்பை உடைத்தால் போதும் - கல்வி மற்றும் பொருளாதாரம். பா.ஜ.க தங்களின் முதல் ஐந்து வருட ஆட்சிக் காலத்திலேயே
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த ஆட்களை இவை இரண்டிலும் அமர்த்தி விட்டனர். இப்போது அவர்கள்
தங்களது வேலையைத் துவங்கி விட்டனர்.
பொருளாதாரத்தை இவர்கள்
ஏற்கனவே உடைத்து விட்டனர். கு.மூர்த்தியும், திரு.சக்தி காந்ததாஸ் அதற்குச் சான்று.
இப்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்பு. இங்குப் புதிய கல்விக் கொள்கை
குறித்துப் பலரும் பகிரும் கருத்துக்கள் மிகவும் அச்சமூட்டுகிறது. இங்கு சில
நண்பர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் அடிப்படை கல்விக்காக தாங்கள் பட்ட சிரமங்களை எழுதியதைப்
படித்தபோது இதயம் கனத்தது.
அவைகள் ஒன்று கூட நான் அனுபவித்ததில்லை. எனக்கு அவை அனைத்து மிகச்
சுலபமாகவே கிடைத்தது. தகுதி (மதிப்பெண்கள்) இல்லாத போதும் பணம் கொடுத்து பொறியியல்
படிக்கும் அளவிற்குப் பொருளாதார பின்புறம் எனக்கு இருந்தது. ஆனால் இன்று எங்களைப் போன்ற அறிய வகை ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு. இதனை
நினைக்கும் போது கூசுகிறது.
அன்று இட ஒதுக்கீடு பிச்சை என்று சிறுமையாக நினைத்த பலர் இப்போது தங்களின் நவ துவாரங்களை
அடைத்துக் கொண்டு இந்த 10% reservation ஆதரித்து பா.ஜ.க நம்மையும் நம் மதத்தையும் காக்க வந்த வரப்பிரசாதம் என்று
மகிழ்கின்றனர்.
NEET, NEXT போன்ற தேர்வுகளில் மூலம் கல்வியறிவும், 10% EWS reservation மூலம் வேலை வாய்ப்பும் அடித்தட்டு மக்களுக்கு எட்டாக் கனியாகிறது.
என்னைப் பொறுத்தவரை இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்துக்
கேட்கும் படலமெல்லாம் வெறும் கண்துடைப்பு தான். இருப்பினும் போராடாமல் இருக்க நாமென்ன பிணமா இல்லை அவர்களின்
அடிவருடிகளா.
வரும் காலங்கள் ஜனநாயக வாதிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகவும் கொடுமையாக இருக்கப் போகிறது.
Comments